விஜய்க்கு எதிராக களத்தில் குதித்த ஜூலி! வா அண்ணே பார்த்துக்கலாம்.. நான் தொடங்கிட்டேன்! சூடு பிடிக்கும் தேர்தல் களம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனித்து களமிறங்கியுள்ளது. சமீபத்தில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனை எதிர்த்து, “தோல்வி பயம் காரணமாகவே இரண்டு இடங்களில் களம்” என அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த சூழலில், விஜய்க்கு எதிராக களமாடப் போவதாக முன்பே அறிவித்திருந்த பிக்பாஸ் ஜூலி தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசிய கருத்துகளை விமர்சித்து ஜூலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, தவெக ஆதரவாளர்கள் ஜூலிக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜூலி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், விஜய் மற்றும் அவரது கட்சியினரை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “உங்கள் கட்சியினர் பெண்களை அவமதிப்பதை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? நீங்கள் போட்டியிடும் தொகுதியில் நேரடியாக வந்து உங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்” என ஜூலி சவால் விடுத்தார்.

இதற்கிடையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூலி, “உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படையாகக் கூறியதும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மொத்தத்தில், விஜய் களமிறங்கியுள்ள தேர்தல் சூழலில் பிக்பாஸ் ஜூலி எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Julie jumped into the fray against Vijay Come on let see I started it The election field is heating up


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->