டெஸ்ட் போட்டி.. ஆரம்பமே அசத்தல்.. டாஸ் வென்ற இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது, இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் துவங்க உள்ளது. 

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாடிப் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். 

முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரஹானே டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா: சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா.

நியூசிலாந்து: டாம் லாதம், வில்லியம் யங், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ரசின் ரவீந்திர, கைல் ஜாமிசன், டிம் சவுதி, சோமர்வில், அஜாஸ் பட்டேல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first test india toss win


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal