ஓடிஐயில் முதல் சதம் – “விராட், ரோஹித் முதல் 2 போட்டியில் முடியாததை சாதிக்க ஹெல்ப் பண்ணாங்க.. – ஜெய்ஸ்வால் உருக்கம் - Seithipunal
Seithipunal


விசாகப்பட்டினத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது. 271 ரன்கள் இலக்காக வைத்த தென்னாப்பிரிக்காவை எளிதில் தாண்டிய இந்தியா, 2–1 என தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றியின் நட்சத்திரமாக ஜெய்ஸ்வால் திகழ்ந்தார்.

முதலில் பேட்டிங்கில் இறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு குவிண்டன் டி காக் (106) மட்டுமே எதிரொலி கொடுத்தார். இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் எடுத்து தாக்குதலை முறியடித்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா, ரோஹித் சர்மா (75), விராட் கோலி (65*), ஜெய்ஸ்வால் (116*) ஆகியோரின் அட்டகாசத்தால் 39.5 ஓவரிலேயே இலக்கை மீறியது. ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்த ஜெய்ஸ்வாலே மான் ஆஃப் த மேட்ச் ஆனார்.

போட்டிக்குப் பின் தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்த ஜெய்ஸ்வால் கூறுகையில்:
“ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதம் எனக்கு பெரிய நிம்மதியை கொடுத்தது. ஆரம்ப இரண்டு போட்டிகளில் நல்ல ஸ்டார்ட் கிடைத்தும் பெரிய ஸ்கோராக்க முடியவில்லை. இன்று அதை மாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.”

ரோஹித் சர்மாவுடன் நடந்த பேச்சும் தனது வரைமுறையை மாற்றியதாகவும் குறிப்பிட்டார்:
“எப்போது அட்டாக் செய்ய வேண்டும், எப்போது சிங்கிள் எடுக்க வேண்டும் என்று ரோஹித் பாய் என்னுடன் எடுத்துரைத்தார். அதனால் ஆட்டத்தை சமநிலைப்படுத்த முடிந்தது.”

விராட் கோலியின் பங்கு குறித்து பேசும்போது ஜெய்ஸ்வாலின் முகம் மேலும் பிரகாசித்தது:
“விராட் பாஜி களமிறங்கியவுடன் எனக்கு ஒவ்வொரு கட்டத்திலும் சிறிய இலக்குகளை கொடுத்தார். ‘இதுவரை செல், இவ்வளவு பார்ட்னர்ஷிப் அமை’ என்று தொடர்ந்து ஊக்குவித்தார். அந்தச் சிறிய இலக்குகள் பெரிய மைல்கல்லாக மாறின. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.”

இந்த வெற்றி, குறிப்பாக இளம் வீரரின் ஆட்டம், இந்திய அணிக்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது. தொடரை வென்ற மகிழ்ச்சியையும், தனது முதல் சதத்தின் நிம்மதியையும் ஒரே மூச்சில் வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், இன்னும் பல பெரிய இன்னிங்ஸ்களுக்கு வழி வகுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First century in ODI Virat Rohit helped us achieve what was impossible in the first 2 matches Jaiswal Urukam


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->