ENGvIND: ஒரேயொரு அரைசதம்... 224 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்திய அணி!
ENGvIND Karun Nair
இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ராகுல் 14 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து கேப்டன் கில்லுடன் சாய் சுதர்சன் களமிறங்கினர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில், கில் 21 ரன்னில் ரன் அவுட் ஆனார். சாய் சுதர்சன் நிதானமாக விளையாடி 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜடேஜா 9 ரன்னில் வெளியேறினார். பின்னர் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பிறகு கருண் நாயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இதில் கருண் நாயர் அரைசதம் அடித்தார்.
முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 52 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். நாயர் 57 ரன்னிலும், சுந்தர் 26 ரன்னிலும் வெளியேறினர். சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா டக் அவுட்டாகி வெளியேறினர்.
இந்திய அணி 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்துக்காக கஸ் அட்கின்சன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.