அன்று கேலி கிண்டலுக்கு ஆளானவர்! இன்று அசுர பந்து வீச்சாளர்! காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை ஓய்ந்தது! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் அருகில் 843 விக்கெட்டை எடுத்து இருந்தாலும், தன்னுடைய கிரிக்கெட்டின் ஆரம்ப கட்ட காலத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணி வீரர் ஒருவரின் ஆட்டத்தை தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டார் இங்கிலாந்து அணியின் வேக பந்துவீச்சாளர் ஸ்ட்டுவர்ட் பிராட்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத, வேகபந்து வீச்சாளர் ஸ்ட்டுவர்ட் பிராட், இதுவரை டெஸ்ட் ஆட்டங்களில் 600 விக்கெட்களையும், ஒரு நாள் ஆட்டங்களில் 178 விக்கெட்களையும், டி20 ஆட்டங்களில் 65 விக்கட்டுகளையும் எடுத்துள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் பரம எதிரிகளாக கருதப்படும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 145 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஒரே வீரர் ஸ்ட்டுவர்ட் பிராட் தான்

சொல்லப்போனால், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மன்களுக்கு மிக முக்கிய எதிரி ஸ்ட்டுவர்ட் பிராட் தான். அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக செயல்பட்டு, விக்கெட்டுகளை கைப்பற்றி, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுப்பார்.

குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னருக்கு பிராட் தான் வில்லன். இருவரும் களத்தில் அந்தளவுக்கு மோதிக் கொள்வார்கள். அந்த காட்சிகளை பார்ப்பதே தனி சுவாரஸ்யம் தான்.

தற்போது 36 வயதை கடந்த ஸ்ட்டுவர்ட் பிராட், தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவரின் வாழ்நாளில் மறக்க முடியாத இரு ஆட்டங்கள் உள்ளன. அது அவருக்கு மட்டுமல்ல கிரிக்கெட் உலகத்திற்கே மறக்க முடியாத ஆட்டம் தான்.


பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆக 2007 ஆம் ஆண்டா? ஆம் அந்த ஆண்டுதான். நீங்கள் நினைக்கும் அதே ஆட்டம் தான் அந்த மறக்க முடியாத இல்லை, இல்லை, பிராட் மறக்க நினைக்கும் ஆட்டம்.

2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் பிராட் இடம்பெற்றிருந்தார்.

ஆட்டத்தின் 18 ஓவரின் இறுதியில் இந்திய வீரர் யுவராஜ் சிங்-ர்க்கும், இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரோ பிளின்டாஃப்க்கும் இடையே மோதல் வெடித்தது.

பிளின்டாஃப் மீதான கோபத்தையும், அடுத்து 19 வது ஓவர் வீசிய ஸ்டூவர்ட் பிராட்-யை போட்டு பொளந்து கட்டினார் யுவராஜ் சிங்.

பிராட் வீசிய ஆறு பந்துகளும் சிக்சருக்கு பறந்தன. யுவராஜின் மாட்டிக்கொண்ட ஸ்ட்டுவர்ட் பிராட் கேரியர் அவ்வளவுதான் முடிந்தது என்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

அவ்வளவு ஏளன பேச்சு, கிண்டலுக்கு ஆளான பிராட், பல நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்தார். அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். 

பின்னர் அதிலிருந்து மீண்டு 2008இல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணிக்கு முக்கிய பங்கை ஆற்றினார்.

அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் பிராட் 23 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

2010இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் 169 ரன்கள் எடுத்து பிராட் தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார். 2007 க்குப்பின் அவர் விழவே இல்லை. 

மறக்க முடியாத சிறந்த ஆட்டம் : 

2015 ஆஷஸ் தொடரில் தனியொரு ஆளாக போராடி, 10 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியை வெற்றி பெறவைத்த ஸ்டூவர்ட் பிராட், தனது வாழ்வின் சிறந்த ஆட்டம் இதுதான் என்று என்று அடிக்கடி சொல்வார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England Cricketer stuart broad Retirement Andrew Flintoff Yuvraj


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->