தினேஷ் கார்த்திக் உற்சாகமாக வெளியிட்ட ட்வீட்.. குவியும் வாழ்த்துக்கள்.!! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் 9ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக கேஎல் ராகுலும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான  டி20 தொடருக்கு இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 32 டி20 போட்டிகள் மற்றும் 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார். அதன்பிறகு அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனிடையே நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாட மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது குறித்து ட்வீட் செய்துள்ள தினேஷ் கார்த்திக், உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dinesh Karthik Tweet for Re entry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->