#IPL2023 || இறுதிப் போட்டியில் தல தோனிக்கு தடையா.? வெளியான பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிஎஸ்கே 7 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் 173 ரன்களை இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களம் இறங்கியது. இந்த போட்டியின் 12ஆவது ஓவரை பத்திரனா வீச 10 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

அதன் பிறகு ஓய்வு எடுக்க வெளியில் சென்ற பத்திரனா 9 நிமிடங்கள் ஓய்வு எடுத்த பிறகு 15ஆவது ஓவரின் போது மீண்டும் களத்திற்கு வந்து 4 நிடமிங்கள் மடுமே பீல்டிங் செய்த பத்திரனாவை 16ஆவது ஓவரை வீச தோனி அழைத்தார்.

ஆனால் பத்திரனா பந்து வீச நடுவர்கள் அனுமதிக்கவில்லை. அப்போது குறுக்கிட்ட தோனி ஏன் என்று விளக்கம் கேட்டு நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு பவுலர் வெளியில் எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்கிறாரோ, அவ்வளவு நேரம் மைதானத்திற்குள் இருக்க வேண்டும் என்பது விதி. பத்திரனா 9 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே பீல்டிங் செய்திருந்தார். இதன் காரணமாக அவர் பந்து வீச மறுக்கப்பட்டுள்ளார். மூன்றாவது நடுவர்களும் நேரம் ஆகிக் கொண்டிருப்பதை வெளியில் இருந்து சுட்டிக் காட்டினர்.

ஆனால் பத்திரனா 16ஆவது ஓவரை வீசாமல் வேறொரு பவுலர் 16ஆவது ஓவரை வீசினால் ரஷீத் கான் அதிக ரன்கள் எடுத்து விடுவார் என்ற காரணத்தால் பத்திரனாவுக்காக தோனி அந்த 5 நிமிடமும் நடுவருடன் வாக்குவாதத்திலேயே இருந்தார்.போட்டி தாமதமாவதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. நேரம் கடந்த பிறகு பத்திரனா மீண்டும் 16 வது ஓவரை வீச தொடங்கினார்.

பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதன் காரணமாகவும் தோனிக்கு அபராதம் பிரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குவாலிபையர் 1 போட்டியின் போது நடுவருடன் தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டு நேரத்தை கடத்தியதற்காக தரை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhoni likely to be banned from playing in IPL final 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->