#IPL2022 : 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி..சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் 56-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் மற்றும் கான்வே ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி 10.1 ஓவர்களில் 110 ரன்களை குவித்த நிலையில் 41 ரன்களுக்கு கெய்க்வாட் அவுட்டனார். அடுத்து களமிறங்கிய சிவம் துபே 19 பந்துகளில் 32 ரன்களை அதிரடியாக குவித்தார்.

அதேபோல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே 49 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் தோனி 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 208 ரன்களை குவித்தது.

அதைத்தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.4 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கட்டுகளை இழந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் 3 விக்கெட்டுகளும், பிராவோ, முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK won by 91 runs against Delhi capitals


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->