திறமைக்கும் வயசுக்கும் சம்பந்தமில்லை! சி.எஸ்.கே டீம் தான் ஜேம்ஸ் ஆண்டர்சனை வாங்கும் – காரணத்தை கூறிய மைக்கல் வாகன்! - Seithipunal
Seithipunal


பிரபல இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது அடுத்த பயணத்தை டி20 லீக் தொடர்களில் தொடர உள்ளார். முதன்முறையாக, 2025-ல் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏலத்தில் கலந்து கொள்ள 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ள நிலையில், ஆண்டர்சன் மிக முக்கியமான பங்கேற்பாளராக உள்ளார். ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் தன்னை பதிவு செய்துள்ள இவர், "50 வயது வரை விளையாட தயாராக உள்ளேன்" என்று உறுதியுடன் கூறியுள்ளார். 

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், ஆண்டர்சனின் ஐபிஎல் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் அவரை வாங்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக குறிப்பிட்டார். "சிஎஸ்கே அணி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அல்லது அனுபவம் கொண்ட வீரர்களை அதிகம் விரும்பும்," என்று வாகன் கூறினார். 

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாகர் போன்ற திறமையான ஸ்விங் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆண்டர்சனின் அனுபவம் மற்றும் அவருடைய ஸ்விங் திறன் அணி பந்து வீச்சுக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆண்டர்சன் கடைசியாக 2014-ல் டி20 போட்டிகளில் பங்கேற்றார். இப்போது டி20 லீக்கில் திரும்பி தனது புதிய பயணத்தை தொடங்கும் அவரின் பந்துவீச்சு திறமை சிஎஸ்கே அணிக்கு மிகுந்த பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CSK Team Will Buy James Anderson Michael Vaughan Explained The Reason


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->