15வது ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15 வது சீசனின் முதல் போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது. இந்த சீசனில் 10 அணிகள் இடம் பெற்று உள்ளது. அதிக தடவை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதிச்சுற்றுக்கு நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

குரூப் ஏ-வில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. குரூப் பி-யில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. 

இந்த போட்டியில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேசப்பட்டியலை பார்ப்போம்.  ருதுராஜ் கெய்க்வாட் - நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவன் கான்வே தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். இரண்டு மற்றும் மூன்றாவது வரிசையில் சென்னை அணியின் அதிரடி வீரரான ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் களம் இறங்குவார்கள். ஐந்தாவது வரிசையில் கேப்டன் ஜடேஜாவும், ஆறாவது வரிசையில் எம்எஸ் தோனி இறங்குவார்கள். இதையடுத்து,  ஷிவம் துபே, பிராவோ ஆகியோர் களம் இறங்குவார்கள். பந்துவீச்சாளர் வரிசையில் துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா, ஆடம் மில்னி இடம் பெறுவார்கள்.

சென்னை அணியின் உத்தேச பட்டியல் : ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி, ஷிவம் துபே, பிராவோ, ஆடம் மில்னி, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK Probable Playing XI


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->