முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன்.! - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் தொடரில் இன்று கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் இரவு ஏழு முப்பது மணி அளவில் தொடங்க உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, ஐபிஎல் 12 தொடர்களில் விளையாடி உள்ளது. இதில், ஒன்பது முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதில், கடந்த 2010ஆம் ஆண்டு, 2011 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

அதே சமயத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை, கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இறுதி சுற்றுக்கு முன்னேறி, அந்த இரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் கோப்பையை வெல்லும் போது, அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் கௌதம் கம்பீர் ஆவார்.

இதற்கிடையே, இந்த ஐபிஎல் 14 வது சீசனில் இன்றைய போட்டிக்கு முன்னதாக வரை, 227 ரன்கள், 17 விக்கெட்டுகளை எடுத்து, இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த ஆல்-ரவுண்டராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா திகழ்ந்து வருகிறார். 

இதற்கான புள்ளி பட்டியல் விவரம் பின்வருமாறு :

ஜடேஜா - 227 ரன்கள், 11 விக்கெட்டுகள்
மொயீன் அலி - 320 ரன்கள், 6 விக்கெட்டுகள்
 பொலார்ட் - 245 ரன்கள், 5 விக்கெட்டுகள்  
ரஸ்ஸல் - 183 ரன்கள், 11 விக்கெட்டுகள் 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK PLAYER jadeya in best al rounder


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal