'ஆசிய கோப்பை எங்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை என்றால்..? ஐசிசி கூட்டத்தில் கவனம் பெற செய்வோம்'; பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா..! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டின் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற்றுக்கொள்ள இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், கோப்பையை வழங்காமல் நக்வி கையோடு கொண்டு சென்றார்.

இந்த சம்பவங்கள் கிரிக்கெட் வரலாற்றில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு மீண்டும் வழங்க வேண்டுமென ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு , பிசிசிஐ கடிதம் மூலம் வலியுறுத்தியது. இதனையடுத்து, வரும் நவம்பர் 04-ஆம் தேதி ஐசிசி கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியின் வசம் கோப்பை வழங்கப்படாத விவகாரத்தில் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம் என்று  பிசிசிஐ செயலாளர் குறிப்பிட்டுளளார். அத்துடன், இந்த தொடர் முடிந்து ஒரு மாத காலம் ஆகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதி இருந்தோம். அவர்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பது தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆசிய கோப்பை இன்னும் அவர்கள் வசம்தான் உள்ளது. அது அடுத்த சில நாட்களில் எங்கள் வசம் வரும் என நம்புவதாகவும், ஒருவேளை கோப்பை எங்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை என்றால் துபாயில் நவம்பர் 04-இல் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் கவனம் பெற செய்யும் வகையில் செயல்படுவோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BCCI plans to discuss Asia Cup issue in ICC meeting


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->