இந்திய அணியில் திடீர் திருப்பம்.. விராட் கோலிக்கு பிசிசிஐ போட்ட உத்தரவு.? - Seithipunal
Seithipunal


விராட் கோலி கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு சதம் அடிக்காத காரணத்தால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 341 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பிறகு தென்னாப்பிரிக்கா தொடர், அயர்லாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தால், கோலி மீது அதிகபடியான விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி விளையாடவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், ஜூலை 24ஆம் தேதி  மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகி உள்ளார். 

இந்நிலையில், விராட் கோலி இங்கிலாந்தில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அடுத்து ஆகஸ்ட் மாதம் இறுதியில் துவங்கும் ஆசிய கோப்பையின் போது மட்டும் விராட் கோலி அணிக்கு திரும்புவார் என பிசிசிஐ  வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆசிய கோப்பைக்கு முன்பு ஆகஸ்ட் 18,20,22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வேவில் நடைபெறும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் அணிகளுடன் விராட் கோலி செல்ல வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜிம்பாவுக்கு எதிரான தனது திறமையை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BCCI new order for virat kohli


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->