20 ஓவர் தொடர்; சூரிய குமார், ரிஸ்வானின் சாதனையை முறியடித்து ஆஸ்திரிய வீரர் உலக சாதனை..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரியா- ருமேனியா கிரிக்கெட் அணிகள் 04 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடியது. இந்த போட்டியில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 57 ரன்கள் எடுத்தார். 02-வது ஆட்டத்தில், 90 ரன்களும், 03-வது ஆட்டத்தில் 74 ரன்களும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்களும் எடுத்து அசத்தியுள்ளார். அத்துடன், 04 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரையும்  ஆஸ்திரியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

30 வயதான கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடியுள்ளார். இதில் 02 சதங்கள், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ஆம் ஆண்டில் 1,326 ரன்கள்), இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ஆம் ஆண்டில் 1,164 ரன்கள்) ஆகியோரை சாதனைகளை பின்னுக்கு தள்ளி புதிய உலக சாதனை படைத்த்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Austrian player breaks Suryakumar and Rizwans record in 20 over cricket


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->