டாஸ் வென்ற ஆஸி.. பந்து வீச்சில் புரட்டியெடுக்கப்போகும் இந்தியா?.. இன்றைய ஆட்டத்தில் யார் யார்?..!
Australia Won Toss to Select Bating India Bowl
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், 3 ஒருநாள் தொடர், 3 டி20 தொடர், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய வீரர்கள் 16 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிவடைந்து, யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதால் களமிறங்க தயாராகியுள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியோடு தொடங்க வேண்டும் என இந்திய அணி களமிறங்கியுள்ளது. சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டுமென ஆஸ்திரேலியாவும் துடிப்புடன் களத்தில் இறங்குகிறது. இதனால், முதல் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிட்னியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இந்திய அணி பந்துவீச தயாராகியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக எஸ் தவான், எம் அகர்வால், வி கோஹ்லி, எஸ் ஐயர், கே.எல்.ராகுல், எச் பாண்ட்யா, ஆர் ஜடேஜா, எம் ஷமி, ஒய் சாஹல், என் சைனி, ஜே பும்ரா ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் சார்பாக எ பிஞ்ச், டி வார்னர், எஸ் ஸ்மித், எம் ஸ்டோய்னிஸ், எம் லாபுசாக்னே, ஜி மேக்ஸ்வெல், எ கேரி, பி கம்மின்ஸ், எம் ஸ்டார்க், எ ஜாம்பா, ஜே ஹேசில்வுட் ஆகியோர் களமிறங்குகின்றனர். கேப்டன் விராட் கோலியின் தலைமையிலான அணி சிறப்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Australia Won Toss to Select Bating India Bowl