துபாய், அபுதாபியில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இன்று தொடக்கம்! - Seithipunal
Seithipunal


17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் துவங்கியது. இப்போட்டி வரும் 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை முதலில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணியின் பங்கேற்பு தொடர்பான சிக்கல் காரணமாக, போட்டி அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.‘ஏ’ பிரிவு: இந்தியா (நடப்பு சாம்பியன்), பாகிஸ்தான், ஒயன், ஐக்கிய அரபு அமீரகம்.‘பி’ பிரிவு: ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங்.

ஒவ்வொரு அணி தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். அதன் பின்னர், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அங்கே வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.

2016 முதல் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை வடிவமைப்பை ஒத்த முறையில் நடத்தப்படுகிறது. அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை எத்தகைய வடிவில் (20 ஓவர் அல்லது 50 ஓவர்) இருக்கிறதோ அதனைப் பொருத்தே ஆசிய கோப்பையும் நடத்தப்படுகிறது.
இதுவரை 50 ஓவர் வடிவில் 14 முறை, 20 ஓவர் வடிவில் 2 முறை ஆசிய கோப்பை நடைபெற்றுள்ளது.

இந்தியா – 8 முறை சாம்பியன்,இலங்கை – 6 முறை சாம்பியன்,பாகிஸ்தான் – 2 முறை சாம்பியன்,இந்த முறை, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுவது, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கணிப்புகளின்படி, சூழ்நிலை அமையுமானால், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதும் வாய்ப்பு உள்ளது.இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நாளை (புதன்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

முதல் நாளான இன்றிரவு 8 மணிக்கு அபுதாபியில்,ஆப்கானிஸ்தான் (ரஷித்கான் தலைமையிலான அணி) ஹாங்காங் (யாசிம் முர்தசா தலைமையிலான அணி)
மோதுகின்றன.

சுழல்ஜாலத் திறனுடன் வலுவாக இருக்கும் ஆப்கானிஸ்தான், சமீபத்திய தோல்வியை மறந்து புத்துணர்ச்சியுடன் துவங்க முயல்கிறது. இதுவரை 11 போட்டிகளில் ஒரு வெற்றியும் பெறாத ஹாங்காங், தன்னுடைய மோசமான வரலாற்றை இந்த முறை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த போட்டி, சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த தொடரில் இந்தியாவின் ஆட்டங்கள் மட்டுமல்ல, இந்தியா – பாகிஸ்தான் மோதல்களே உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை கவரப்போகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asia Cup T20 cricket starts today in Dubai and Abu Dhabi


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->