கேரளாவில் மீண்டும் ஹனி டிராப்...! வாலிபரின் நிர்வாண படத்தால் சிக்கிய மூவர்...!
Honey trap again Kerala Three arrested for sharing nude photos youth
கேரள மாநிலத்தில் “ஹனி டிராப்” மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் இளம் வாலிபர்கள் மட்டுமின்றி, வயதானவர்கள் மற்றும் வியாபாரிகளும் சிக்கி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.இதில் தங்களது அவமானம் கருதி பலர் புகார் அளிக்காததால், கும்பல்கள் தடையின்றி மோசடி செய்து வருகின்றன.

இந்தநிலையில், மலப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபர், மாவேலிக்கரையை சேர்ந்த கவுரி நந்தா (20) என்ற இளம்பெண்ணின் வலையில் சிக்கினார். அவர் நட்பாக பழகி, பின்னர் கோழிக்கோடு குந்த மங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு வாலிபரை அழைத்தார்.
அங்கு சென்ற வாலிபரின் நிர்வாண படங்களை எடுத்து, அதை குடும்பத்தினருக்கு அனுப்புவோம் என மிரட்டினார்.இதில், கவுரியுடன் திருரங்கடி பனஞ்சேரியை சேர்ந்த அன்சிகா (28) மற்றும் அவரது கணவர் முகமது அபிப் இணைந்து, அந்த வாலிபரிடம் தொடர்ந்து பணம் பறித்தனர்.
இந்த மோசடியில் அவர் ஒருலட்சம் ரூபாய்க்கு மேல் இழந்தார்.இறுதியில், மனஉளைச்சலில் அவதிப்பட்ட வாலிபர் காவலில் புகாரளித்தார். அதன்பேரில், காவலர்கள் வழக்குப்பதிந்து கவுரி நந்தா, அன்சிகா, முகமது அபிப் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.மேலும் இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
Honey trap again Kerala Three arrested for sharing nude photos youth