சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் சாம்பியன் வென்று அரவிந்த், பிரணவ் அசத்தல் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024-க்கான போட்டிகள் இந்த மாதம் 5-ம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று வரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் சிறந்த வீரர்கள் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டியிட்டனர்.

இதற்கிடையே, சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024-ன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.  இதில், அமெரிக்காவின் லெவோன் அரோனியனை வீழ்த்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும்,  சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தனது வியூகத் திறமையால், குறிப்பாக இறுதிச் சுற்றில், தனது மூலோபாய புத்திசாலித்தனத்தை உறுதிபட நிரூபித்து பட்டம் வென்ற அரவிந்துக்கு வாழ்த்துகள் என்றும், பிரணவுக்கும் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

மேலும், சேலஞ்சர்ஸ் பிரிவில் அவரது சிறப்பான செயல்திறன் எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையை காட்டுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர்,  உலகளாவிய செஸ் அரங்கில் சென்னையின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் இந்த நிகழ்விற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arvind pranav asthal won chennai grand masters champion chief minister mk stalin congratulated him


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->