பகீர் சம்பவம்! மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு! நடந்தது என்ன?
bad incident School student dies of electrocution What happened
சென்னை திருவொற்றியூரில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன், டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தான்.அப்போது பூமிக்கு அடியில் சென்ற மின் கேபிளில் கசிவு ஏற்பட்டு தேங்கிய மழை நீரில் பாய்ந்துள்ளது.

இது தெரியாமல் அங்கு சென்ற மாணவன் 'நஃபில்' மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினான்.
இதையடுத்து, முறைகேடாக மின் கேபிள் பொருத்தியதே உயிர் இழப்பிற்கு காரணம் என மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி,ஏற்கனவே அதே பகுதியில் இரண்டு நபர்கள் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில், 3 -வதாக பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bad incident School student dies of electrocution What happened