ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே சில மாதங்களுக்கு முன்புதான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்று இரவு 10.30 மணியளவில் கார் விபத்தில் சிக்கியதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் காரில் அவர் மட்டும் தனியாக சென்றுள்ளார். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

46 வயதாகும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட், 198 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999-2007 ஆண்டுகளுக்கு இடையில் கிரிக்கெட் உலகை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்திய போது அந்த அணியின் முக்கிய வீரராக இருந்தவர் ஆன்ட்ரூ சைமன்ஸ். ஓய்வுக்குப் பிறகு ஃபாக்ஸ் கிரிக்கெட்டின் வர்ணனை குழுவில் இடம்பெற்று பணியாற்றி வந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andrew Symonds died in car accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal