போட்டி தொடங்கும் முன் காயமடைந்த முக்கிய வீரர்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை டி20 தொடரில் இருந்தும் விலகல்!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை எதிர்கொண்டது. டி20 கிரிக்கெட் தொடரினை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான தொடர் ஆரம்பமாகிறது. இத்தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷிக்கர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. 

தென் ஆப்பிரிக்கா அணியானது பாவுமா தலைமையில் களம் இறங்குகிறது. பாஸ் வென்ற இந்தியா அணி பந்திவீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் முடிவில் பேட்டி அளித்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பாவுமா கூறியதாவது "தென்னாபிரிக்க அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் இத்தொடரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

 அவரது இடது கை கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக இத்தொடர்ந்து வெளியேறுவதாக தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பாவுமா தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரிலிருந்தும் அவர் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி பின்னடைவை சந்தித்துள்ளது. உலக கோப்பை டி20 தொடருக்கான அணியில் டுவைன் பிரிட்டோரியஸ் பதில் மாற்று வீரர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All rounder Dwaine Pretorius has been ruled out of ODI series against and WCT20


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->