ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட தவெக தலைவர் நடிகர் விஜய்..! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும்  ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி.

இவர் தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ள நிலையில், அதாவது, ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்,  ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணத்தில், உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசிய, வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த திருமண விழாவில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்றுள்ள புகைப்படமும் வைரலாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay attended Jagan Mohan Reddys house wedding ceremony


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->