இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 03-வது டி20 போட்டி; ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் பறக்கவிட்ட SKY இன் சாதனையை சமன்செய்த அபிஷேக் சர்மா..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிமோதும் 03-வது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்றது அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 03 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 06 பவுண்டரிகள் 05 சிக்சர்கள் என பறக்கவிட்டு, 69 ரன்கள் அடித்து வெளியேறினார். மறுமுனையில் 06 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய இஷான்கிஷனும் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்திய அணி, 20 ஓவர்களில், சகல விக்கெட்டுகளை இழந்து, 223 ரன்களை எடுத்துள்ளனர்.

தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேற்கிந்திய அணிகள் சார்பில், Roston Chase, Shamar Joseph, Shamar Springer தலா இரண்டு விக்கெட்டினை கைப்பற்றினர். 

இன்ற போட்டியில், 05 சிக்சர்களை அடித்த அபிஷேக் சர்மா ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக சூர்யகுமார் யாதவின் சாதனையை சமன் செய்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 2022-ஆம் ஆண்டு 68 சிக்சர்கள் அடித்துள்ளார். நடப்பாண்டு அபிஷேக் சர்மாவும் 68 சிக்சர்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் இருக்கும் இஷான் கிஷன், சஹிப்சதா ஃபர்ஹான் அனைவரையும் விட பந்துக்கு சிக்சர் அடிக்கும் விகிதம் அபிஷேக் சர்மாவிற்கே குறைவாக உள்ளது. சூர்யகுமார் 09 பந்துக்கு 1 சிக்சர் விகிதம் வைத்திருந்த நிலையில், அபிஷேக் சர்மா 06 பந்துக்கு 1 விகிதத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

அதேபோல சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abhishek Sharma equals Suryakumar Yadavs record for the most sixes hit in a single year


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->