2026 ஐபிஎல் மினி ஏலம்: 240 இந்திய மற்றும் 110 வெளிநாட்டு வீரர்கள் தேர்வு; ரூ.2 கோடியில் 40 வீரர்கள்..! - Seithipunal
Seithipunal


19-வது ஐ.பி.எல் சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வரும், 16-ஆம் தேதி 'ஐபிஎல் 2026 மினி ஏலம்' அபுதாபியில் நடைபெறவுள்ளது. 

இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 240 இந்தியர்கள் உள்ளிட்ட மொத்தம் 350 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். ஏலத்தில் மொத்தம் 1,390 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், ஐபிஎல் அணிகளுடன் கலந்தாலோனை நடைபெற்றது. அதன் பின்னர் பிசிசிஐ 1005 வீரர்களை இறுதியாக நீக்கியது. மீண்டும் வீரர்கள் இறுதிசெய்யப்பட்டு 350 வீரர்களின் பெயர்களை மட்டுமே இறுதி செய்யப்படத்தில், 35 புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஐ.பி.எல் அணிகளிடம் 77 வீரர்களுக்கான இடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பிரிவில் 224 புதிய இந்திய வீரர்களும், 14 புதிய வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 350 பெயர்களில், 40 கிரிக்கெட் வீரர்கள் அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதன்படி, இந்த விலையில், 40 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கத் தேர்வு செய்துள்ளனர். 

மேலும், ஏனைய 227 புதிய உள்நாட்டு வீரர்கள் தங்கள் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்தை நிர்ணயித்துள்ளனர். அத்துடன், 2026 சீசனுக்கு முன்னதாக அணிகள் மீண்டும் கட்டியெழுப்ப முற்படுவதால், பல முன்னணி வீரர்களின் பெயர்கள் ஏலப்  பெயர்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட ஒரு ஐபிஎல் அணியின் கோரிக்கையைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் பெயர் மினி ஏலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சத்தம் நடித்துள்ள அவர்,  தனது டி20 ஓய்வு முடிவையும் மாற்றிக்கொண்டார். இதன் காரணமாக அவர் ஐபிஎல் ஏலப் பட்டியலில் அவரது அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த மினி ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள்:

அரப் குல் (ஆப்கானிஸ்தான்), மைல்ஸ் ஹேமண்ட் (இங்கிலாந்து), டான் லெட்கன் (இங்கிலாந்து), குயின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா), கானர் எஸ்தர்ஹூய்சன் (தென்னாப்பிரிக்கா), ஜார்ஜ் லிண்டே (தென்னாப்பிரிக்கா), பயாண்டா மஜோலா (தென்னாப்பிரிக்கா), டிரவீன் மேத்யூ (இலங்கை), பினுர பெர்னாண்டோ (இலங்கை), குசல் பெரேரா (இலங்கை), துனித் வெல்லலகே (இலங்கை), அகீம் அகஸ்டே (மேற்கிந்திய தீவுகள்).

மினி ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்:

சாதிக் ஹுசைன், விஷ்ணு சோலங்கி, சாபிர் கான், பிரிஜேஷ் சர்மா, கனிஷ்க் சவுகான், ஆரோன் ஜார்ஜ், ஜிக்கு பிரைட், ஸ்ரீஹரி நாயர், மாதவ் பஜாஜ், ஸ்ரீவத்ஸ் ஆச்சார்யா, யஷ்ராஜ் புஞ்சா, சாஹில் பராக், ரோஷன் வઘசரே, யஷ் டிசோல்கர், அயாஸ் கான், துர்மில் மட்கர், நமன் புஷ்பக், பரிக்ஷித் வல்சங்கர், பூரவ் அகர்வால், ரிஷப் சவுகான், சாகர் சோலங்கி, எஜாஸ் சவாரியா மற்றும் அமன் ஷெகாவத்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

240 Indian and 110 overseas players shortlisted in 2026 IPL mini auction


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->