வேதனையில்லா வாழ்க்கை அமைய வேதைப் பொருத்தம் அவசியம்? - Seithipunal
Seithipunal


வேதைப்பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என்று பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரஜ்ஜூவாக, ரஜ்ஜூ பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரஜ்ஜூ பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமையும். ஆனால், வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுகிய காலம் கூட மணவாழ்வு துன்பமாகவே அமையும்.

பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக இருந்தால் அவர்கள் கணவன் மனைவியான பின்பு இருவரும் சண்டை சச்சரவுடன் தான் வாழ்வார்கள். வாழ்க்கையில் சதா சண்டையும், வம்பும் வழக்கும், வேதனையாகவுமே இருக்கும். வேதைப்பொருத்தம் அனுகூலமாக இருந்தால் சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். தம்பதிகள் எக்காலத்திலும் மனமகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள்.

வேதை உடைய நட்சத்திரங்கள் :

அஸ்வினி - கேட்டை

பரணி - அனுஷம்

கார்த்திகை - விசாகம்

ரோகிணி - சுவாதி

திருவாதிரை - திருவோணம்

புனர்பூசம் - உத்திராடம்

பூசம் - பூராடம்

ஆயில்யம் - மூலம்

மகம் - ரேவதி

பூரம் - உத்திரட்டாதி

உத்திரம் - பூரட்டாதி

அஸ்தம் - சதயம்

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று வேதை ஆகும்.

கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த வேதையை அறிய வேண்டும். தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும், துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப்பொருத்தமாகும். வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள். எனவே, வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாமல் மாறி இருப்பின் பொருத்தம் உண்டு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vetha poruththam


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->