இது பண்டிகை காலம்.. விளக்குகளால் வீடுகளை அலங்கரிக்க தயாராகுங்கள்.! - Seithipunal
Seithipunal


தீப வழிபாடு என்பது மன, உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என புராணங்கள் சொல்கிறது. தீபமானது வீட்டில் பூஜையறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது. எல்லா செயல்களின் தொடக்கத்திலும் தீபம் ஏற்றப்பட்டே செயல்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.

நோய் தொற்றுகளை பரவவிடாமல் தடுக்கும் சக்தி, சில எண்ணெய் வகைகளுக்கும், தீபத்திற்கும் உண்டு. அதனால்தான் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம்.

ஆகவே வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், முப்பெருந்தேவியரும் எழுந்தருளி கடாட்சம் தருவதாக நம்பிக்கை. தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி நல்ல பலன்களை தருகின்றன.

இது பண்டிகை காலம்..

மன்னர் ஆட்சிக் காலத்தில் அரண்மனையை விதவிதமான விளக்குகள் அலங்கரித்தன. பலவித விளக்குகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது விளக்குகள் பல்வேறு வடிவங்களில் வீடுகளை அலங்கரிக்க வந்துவிட்டன. ஒவ்வொரு பண்டிகையின் போது கதாநாயகனே விளக்குகள்தான்.

பண்டிகை காலம் வந்தாச்சு.. உங்கள் வீடுகளை அலங்கரிக்க விளக்குகளை தயார் செய்து விட்டீர்களா?

நவராத்திரி

தீபாவளி

கந்தசஷ்டி

திருக்கார்த்திகை என பண்டிகைகள் வரிசையாக காத்து கொண்டிருக்கிறது. இப்பொழுதே உங்கள் வீடுகளை அலங்கரிக்க விளக்குகளை தேர்வு செய்யுங்கள்.

ஆமை விளக்கு

தாமரை விளக்கு

குபேர விளக்கு

சங்கு சக்கர விளக்கு

மயில் விளக்கு

பஞ்சகவ்ய விளக்கு என பல்வேறு வடிவங்களால் செய்யப்பட்ட விளக்குகள் இப்போது ஆன்லைனிலேயே கிடைக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Use colorful lights in festival time 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->