இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொருட்சேர்க்கை காத்துக்கொண்டு இருக்கிறது..!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

பொதுக்கூட்டப் பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். செய்தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் இலாபம் உண்டாகும். புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். சுயதொழிலில் அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:

தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும். வாக்குவன்மையால் இலாபம் கிடைக்கும். சுயதொழிலில் மேன்மையான சூழல் நிலவும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் இலாபம் கிடைக்கும்.

மிதுனம்:

மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் சாதகமாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும்.

கடகம்:

தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடக்கவும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத வேலைகளை தற்போது செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும்.

சிம்மம்:

நண்பர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். கூட்டாளிகளுடன்  இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனைவிவழி உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி:

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். இளைய சகோதரர்களின் செயல்பாடுகள் ஆதரவாக இருக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாரிசுகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

துலாம்:

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். காதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் தொழில் உண்டான பிரச்சனைகள் நீங்கும்.

விருச்சகம்:

நீர்நிலை சம்பந்தமான தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். பங்குதாரர்களின் ஆதரவால் தொழில் அபிவிருத்தி உண்டாகும்.

தனுசு:

வர்த்தக பணிகளில்  இலாபம் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அந்நியர்களின்  நட்பு கிடைக்கும். எழுத்து பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தர்க்க விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தைகள்  சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம்:

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். குழந்தைகளின்  எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சமயோசித செயல்பாடுகளின் மூலம் கீர்த்தி உண்டாகும்.

மீனம்:

வெளியூர் தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அசையா சொத்துக்களின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today rasipalan fib 23


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->