கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
thiruvannamalai girivalam timing announce
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலின் பின்புறம் உள்ள மலையை பக்தர்கள் 'அண்ணாமலை' என்று அழைத்து வருகின்றனர். இந்த மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அப்படி செல்லும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கிரிவலம் செல்லும் நேரம் அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், இந்த மாதம் பவுர்ணமி வருகிற 6-ந்தேதி காலை 11.49 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9.53 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
thiruvannamalai girivalam timing announce