தசாபுத்தி காலம்.. ஒரு கிரகம் எத்தனை வருடம் ஆட்சி செய்கிறது?! உங்களின் தசாபுத்தி என்ன?!
thasaputhi palangal
பிறப்பின் முதலே நவகிரகங்கள் நம் குணநலன்கள் மற்றும் பண்புகளை எப்படி கட்டுப்படுத்துகின்றதோ அதைபோலவே நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் தசாபுத்தி மூலம் கட்டுப்படுத்துகின்றன.
அதாவது தசா என்பது ஒரு கிரகம் குறிப்பிட்ட காலம் வரை நம்மை கட்டுப்படுத்தும் காலம் ஆகும்.
அந்த குறிப்பிட்ட காலம் முழுவதும் ஒரு கிரகம் மட்டும் நம்மை ஆட்சி செய்வதில்லை. ஒரு கிரகத்தின் திசையில் அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நாட்கள் என அனைத்து கிரகங்களும் ஆள்கின்றன.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் என பகுத்து மானிடப் பிறவியின் ஆயுட்காலம் 120 வருடங்கள் என நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள காலம் பின்வருமாறு :
கேது திசை காலம் - 7 வருடம்
சுக்கிரன் திசை காலம் - 20 வருடம்
சூரியன் திசை காலம் - 6 வருடம்
சந்திரன் திசை காலம் - 10 வருடம்
செவ்வாய் திசை காலம் - 7 வருடம்
ராகு திசை காலம் - 18 வருடம்
குரு திசை காலம் - 16 வருடம்
சனி திசை காலம் - 19 வருடம்
புதன் திசை காலம் - 17 வருடம்
மொத்த திசை காலம் - 120 வருடங்கள்
தசாபுத்தி என்பது அனைவருக்கும் கேது திசையில் இருந்து ஆரம்பிக்காது. அவரவர் ஜென்ம நட்சத்திரங்களின் அடிப்படையில் திசையானது ஆரம்பிக்கும். ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங்கள் என ஒன்பது கிரகங்களுக்கும் 27 நட்சத்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் பின்வருமாறு :
அஸ்வினி, மகம், மூலம் - கேது
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்
திருவாதிரை, சுவாதி, சதயம் - ராகு
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்