மாசி மாத சங்கடஹர சதுர்த்தி... மஞ்சள்கயிற்றை மாற்றி... சுமங்கலி வரத்தை பெறுங்கள்.!! - Seithipunal
Seithipunal


பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதிலும், ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும்.

சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி ஆகும். பௌர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி விரதம் :

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து மகா கணபதியை மனதில் நினைத்து பூஜிக்க வேண்டும்.

இரவு பூஜை முடிந்த பின் விநாயகர் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும். இந்த விரதத்தை விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மஹா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடைபிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

சதுர்த்தி விரத பலன்கள் :

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும். அதுவும் மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று இருக்கும் விரதம் துன்பங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை உடையது. 

சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை தொடங்குபவர்கள் மாசி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ, ஆவணி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ ஆரம்பித்து கடைபிடித்து வந்தால் விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறலாம்.

மாசியில் தாலிக்கயிறு :

இம்மாதத்தில் சக்தி சிவத்தோடு ஐக்கியமாவதால் இம்மாதத்தில் திருமணம் நடத்தப் பெற்ற தம்பதியர்கள் நீண்ட ஆயுளோடு நிறைந்த திருமண வாழ்வினைப் பெறுவர். இதனை மாசிக்கயிறு பாசி படியும் என்ற பழமொழி மூலம் உணரலாம். திருமணமானப் பெண்கள் இம்மாதத்தில் தாலிக்கயிற்றினை மாற்றிக் கொள்கின்றனர். சங்கடஹர சதுர்த்தியான இன்று மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் மஞ்சள் கயிறு மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும்.

சனி தோஷம் விலகும் :

இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sumangali viratham


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->