பாசக்கார குணமுடைய கோவக்கார காவல் தெய்வம் சுடலை மாடசாமி..!! - Seithipunal
Seithipunal


சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. தென் மாவட்டங்களில் பரவலாக குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு சில சுடலை மாட சுவாமிக் கோயில்களைத் தவிர மற்ற அனைத்துக் கோயில்களும் சாதரணமாகவே காணப்படுகின்றன.

பெரிய மண்டபங்களை மாடம் என கூறுவர். பார்வதி கயிலாயத்தில் ஆயிரம் தூண்களை கொண்ட மண்டபத்தில் உள்ள தூண்விளக்கு சுடரில் பிறந்ததால் மாடன் எனவும் சுடலை என்பது உயிரற்ற உடலை குறிக்கும் மயானத்தில் எரிந்த பிணத்தை உண்டதால் சுடலைமாடன் என பெயர் பெற்றார்.காளை உருவம் எடுத்து பகவதியம்மன் கோயில் கோட்டையை சிதைத்ததால் இவர் காளையின் தலையுடனும் காட்சியளிப்பதுண்டு. இந்த சுடலை மாடனுக்கு மூன்று விதமான பலிகள் தரப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி சுடலை மாடன் கோயில், சங்கனாபுரம்-அருள்மிகு ஸ்ரீ வடக்கு-அத்தியான் சுடலை மாடசாமி திருக்கோவில், பாலாமடை கீழக்கரை சுடலை மாடன் கோவில், தென்கலம்புதூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்திருக்கும் ஐகோர்ட் மகாராஜா கோவில், சிறுமளஞ்சி (ஏர்வாடி) சுடலை மாடன் கோயில், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள‌ ஊர்காடு (உய்காடு) சுடலை மாடன் கோயில், வள்ளியூர் அருகில் உள்ள கலந்தபனை உய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவில், நெல்லை மாவட்டம் பழவூர் எலந்தையடி சுடலை மாடன் கோயில், கன்னன் குளம் பெருமாள்புரம் தோட்டக்கார மாட சுவாமி போன்றவை மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் சிலவாகும்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே வடலிவிளை ஊரில் உள்ள சுடலைமாடன் கோவில் மற்றும் வடக்கு சூரங்குடியில் உள்ள சுடலைமாடன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்.

திருச்செந்தூரில் ஆவுடையார் குளத்தின் தென்பகுதியில் சுடலை மாட சுவாமித் திருக்கோவில் ஓன்று அமைந்துள்ளது. அதுபோல் சோனகன்விளையில் அமைந்திருக்கும் நாலாயிரமூட்டையார் குளக்கரையில் நாடார்கள் வழிபடும் பிரசித்தி பெற்ற சுடலைமாடசுவாமி ஆலையம் அமைந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரித் தாலுகா வடக்கு விஜயநாராயணத்தில் புகழ் பெற்ற ஒத்தப்பனை சுடலை மாட சுவாமிக் கோவில் உள்ளது. நாகர்கோவில் நகரின் ஒழுகினசேரி சுடுகாட்டில் இருக்கும் மயான/மாசான சுடலைமாடன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது, இங்குள்ள சுடலைமாடனே மிகப்பெரிய சுடுகாட்டில் வீற்றிருக்கும் மயான சுடலை ஆவர், சுசீந்திரம் அருகேயுள்ள தாணுமாலையன்புதூரில் அமைந்திருக்கும் சிவசுடலைமாடன் கோவிலின் சுடலைமாடன் சிலை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவமாக கல்லில் செதுக்கப்பட்ட பழமையான சுடலைமாடன் உருவச்சிலையாகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Small Notes about Sudalai Madasamy Ails Sudalai Madan


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->