அத்திவரதரை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்காக., புதிய மாற்றத்தை கொண்டுவந்த மாவட்ட நிர்வாகம்!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் 19வது நாளான இன்று அத்திவரதர் நீலவண்ணப் பட்டடை கொண்டும், வெட்டிவேர் மாலை, ஏலக்காய் மாலை உள்ளிட்டவை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில் விடுமுறை தினங்களான இன்றும், நாளையும் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம்  பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை முன்னிட்டு அவ்வப்போது கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தரிசனத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்காக தனி வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது, இந்த கோரிக்கைகளை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கிழக்கு ராஜ கோபுரத்திலிருந்து தனியாக கோவில் உட்பிரகாரத்தில் வழி அமைத்து நேரடியாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு முன் 3 இலவச தரிசன வரிசையில் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய வசதிகள் உள்ள நிலையில், இந்த 4 வது வரிசை மூலம் மேலும் சுலபமாக தரிசனம் செய்ய முடியும்.

இது ஒருபுறம் இருக்க சுகாதாரத்துறை சார்பில் 40 மருத்துவர்கள், 10 மேற்பார்வையாளர்கள் மற்றும் 300 ஊழியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினரும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் உணவு கிடைக்காமல் அவதியடைவதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தயிர்சாதம், எலுமிச்சை சாதம், பால் உள்ளிட்டவற்றை வழங்க தொண்டு நிறுவனங்களுக்கும் போலீசாருக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

separate queue for ladies


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->