நாளை மகாளய அமாவாசை.. தானம் செய்து முன்னோர்களின் ஆசியை பெற்றிடுங்கள்..!! - Seithipunal
Seithipunal


தானம் என்பது தனக்கே இல்லாத நிலை வரும் வரை தருவதாகும். அதுவும் மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள், சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்தவுடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நற்கதி கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்தால் நல்ல பலன்களை அடையலாம்.

கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததற்கு சமம். எனவே, இத்தகைய சிறப்புடைய பசுவிற்கு தங்களால் இயன்றளவு உணவை அளிக்கவும்.

பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்திற்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்திக்கீரையை உணவாக அளிக்கலாம். வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

அனைவரும் ஒரேநாளில் அகத்திக்கீரை தருவதால் பசுவிற்கு சலிப்பு ஏற்பட்டு அகத்திக்கீரையை உண்ண மறுக்கிறது. எனவே, அகத்திக்கீரைக்கு பதிலாக கோதுமை தவிடு, அரிசி தவிடு, புண்ணாக்கு போன்றவையும் அமாவாசை அன்று தானம் செய்யலாம்.

தானம் செய்ய ஏற்ற எளிதாக சமைக்கும் வகையில் கத்தரி, அவரை, பீன்ஸ், வெண்டை, உருளை, கேரட், பீட்ரூட், முருங்கை, கோஸ், வாழைக்காய், முழுபூசணி போன்றவற்றை தானம் தருதல் நன்று. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்மவினைகளை போக்கி கொள்ள முடியும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்

தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்

தீபம் - கண்பார்வை தெளிவடையும்

அரிசி - நமக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கும்

நெய் - நாள்பட்ட தீராத நோய்களை போக்கும்

பால் - துக்கம் நீங்கும்

பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்

தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்

நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

பூமி தானம் 

அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களையும் மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு ஒருவரின் திசாபுத்திகள் தொடங்கும்.

உதாரணமாக, ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் பூராடம் எனில் அவர்களுக்கு ஆரம்ப திசை சுக்கிர திசை. அதன் பின் சூரிய திசை, சந்திர திசை என வரும். எந்த திசை ஆரம்பமோ, அதற்கு அடுத்ததில் இருந்து அடுத்தடுத்த திசை தொடரும்.

நமக்கு தற்போது எந்த திசை நடைபெறுகிறது? என்பதை ஜாதகப்படி தெரிந்துக்கொண்டு அதற்கேற்ப தெய்வத்தை வழிபட்டு வந்தால், நமக்கு ஏற்படும் தடைகளை தகர்த்து வாழ்வில் முன்னேறலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

purattaasi amaavasai 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->