''பெருமாள் வழிபாடு'': பணத்தேவையை பூர்த்தி செய்யும் ஆன்மீக தகவல்கள்!
perumal valipadu anmika thakavalkal
தனி மனிதனின் வாழ்வாதாரம் என்பது வருமானத்தை பொறுத்து அமைகிறது. அவர்களது வருமானத்தை பொறுத்துதான் அடிப்படைத் தேவைகளும் இருக்கும். பலரும் வருமானம் இல்லாமல் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள்.
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டத்தில் இருப்பவர்கள் பண வரவை அதிகரிக்க பெருமாளை என்ன முறையில் வழிபட வேண்டும் என ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்புதான் பண வரவை அதிகரிக்கும். அதன் அடிப்படையில் மட்டுமே வசதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிலைக்கும்.
கடினமாக உழைத்தும் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியாமல் இருப்பவர்கள் பெருமாளை ஆன்மீக முறையில் வழிபட வேண்டும்.

பெருமாளுக்கு உகந்த தினமாக புதன்கிழமை, சனிக்கிழமை உள்ளது. இந்த நாட்களில் பெருமாள் அல்லது விஷ்ணு ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்.
தங்களின் வசதிக்கேற்ப எந்த நேரத்திலாவது சென்று வழிபடுவது சிறப்பு. புதன்கிழமையை தேர்வு செய்தால் தொடர்ந்து வாரம் தோறும் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் சனிக்கிழமை தேர்வு செய்தால் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் வழிபாட்டை தொடர வேண்டும். ஒரு பெரிய அகல் விளக்கை வாங்கிக்கொண்டு நெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

பின்னர் பெருமாளிடம் ஏதாவது ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும் பிறகு 11 முறை பெருமாளை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் ''ஓம் நமோ நாராயணா'' என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் பெருமாளை மட்டுமே நினைத்து மந்திரத்தை உச்சரித்து வலம் வர வேண்டும்.
இதுபோல் தொடர்ந்து 27 வாரங்கள் செய்து வந்தால் தங்களது கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும். அது மட்டுமல்லாமல் பண வரவும் அதிகரிக்கும்.
நியாயமாக கிடைக்கும் விஷயங்களை மட்டும் பெருமாளிடம் வேண்டுதலாக வைக்க வேண்டும். சந்தேகமில்லாமல் பெருமாளை முழு மனதோடு நம்பி வழிபட்டால் நம் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்பது உண்மை.
English Summary
perumal valipadu anmika thakavalkal