நாளை சனிக்கிழமை.. ஏழு ஜென்ம பாவங்களை போக்க பச்சரிசியை கொண்டு இப்படி செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


ஏழு ஜென்ம பாவங்களையும் கூட பச்சரிசி கொண்டு தீர்க்க முடியும் என கூறுகிறது ஐதீகம். சனிக்கிழமையில் விடியற்காலை எழுத்து குளித்து விட்டு தூய்மையாக கையில் கொஞ்சம் பச்சரிசியை எடுத்து, அப்படியே சூரிய பகவானை பார்த்து வணங்கிவிட்டு, பின்னர் அந்த அரிசியை கையில் வைத்துக்கொண்டு விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும்.

அப்போது கையில் வைத்து இருக்கும் பச்சரிசியை தூவி விட அதனை எறும்பு முழுவதுமாக எடுத்து சென்று விட்டால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்கிறது ஐதீகம்.

கோவில் சுற்றும் போது நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். இந்த உணவை சாப்பிட்டு முடிக்கவே எறும்புகளுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகுமாம். இந்த காலத்தில் எறும்பகளின் செயல்பாடும் அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பதாக புராணங்களில் கூறுவதுண்டு.

அதாவது எறும்பின் எச்சில் அந்த பச்சரிசி மீது படும் போதே அந்த அரிசி கெடாமல் சில ஆண்டு காலம் வரை இருக்கும். இதன்மூலம் மிக கொடுமையான விளைவுகளைத் தரக்கூடிய அஷ்டம சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி ஆகியவற்றால் உண்டாகும் எந்த விதமான தீங்கும் நம்மை அண்டாமல் இருக்குமாம். அதனால் தான் நம் முன்னோர்கள் எறும்புகளுக்கு அவ்வப்போது தேவையான அரிசி மற்றும் சில உணவு வகைகளை தூவி விடுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pacharisi special for sani


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->