நவராத்திரி இரண்டாம் நாள் : யாரை வழிபட வேண்டும்.? என்னென்ன பலன்கள்.? - Seithipunal
Seithipunal


சகல சௌபாக்கியங்களையும் அருளும் இரண்டாம் நாளான கௌமாரி.!

அம்மன் வடிவம் : கௌமாரி.

பூஜையின் நோக்கம் : மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படுதல்.

கௌமாரி வடிவம் :

அடியாருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவள்.

மயில் வாகனமும், சேவல் கொடியும் கொண்டவள்.

முருகப்பெருமானின் அம்சத்திற்கு ஆதாரமானவள்.

அகங்கார சொரூபம் கொண்டவள்.

அழகிற்கும், வீரத்திற்கும் உரியவள்.

உடல் பலமும், ஆன்ம பலமும் என இரண்டையும் அளித்து ரட்சிக்கக்கூடியவள்.

கௌமாரி தேவியை தேவசேனா என்றும் அழைப்பார்கள்.

தென்நாட்டில் இரண்டாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சூலினி துர்க்கை.

திரிபுர சம்காரத்தில் சிவபெருமானுடன், அம்பிகை கரங்களில் சூலம் கொண்டு சூலப்பணியாக சென்றார்கள்.

சிவபெருமான் திரிபுரத்தில் இருந்த சான்றோர்களை அருள் செய்த போது அம்பிகையும், சிவபெருமானுடன் இருந்து அருள் பாவித்தார்.

திரிபுர வதத்தில் அம்பிகை கொண்ட சொரூபம் சூலினி துர்க்கை வடிவம் ஆகும்.

நாம் செய்த வினைப்பலனுக்கு ஏற்ப தீமைகளை குறைத்து நன்மைகளை அருளும் குணம் கொண்டவள்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : முல்லை

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : துளசி 

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : சந்தன நிறம் 

அன்னைக்கு செய்ய வேண்டிய அலங்காரம் : ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர் : பன்னீர் ரோஜா 

கோலம் : கோதுமை மாவால் கட்ட கோலம் போட வேண்டும்.

நைவேத்தியம் : புளியோதரை

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 3 வயது.

குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : ஆரோக்கியம் பெருகும்.

பாட வேண்டிய ராகம் : கல்யாணி

பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : புல்லாங்குழல்

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சுண்டல் வறுவல்

பலன் : உடல் ஆரோக்கிய குறைகள் நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Navaratri Pooja 2nd day pray gowmari Amman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->