நவராத்திரியில் கடன் தொல்லையை தீர்க்கின்ற.. அகண்ட தீபம், அணையா விளக்கு ஏன்.?! - Seithipunal
Seithipunal


நவராத்திரி வழிபாட்டில், மிக முக்கியமானது அகண்ட தீபம் ஆகும். நவராத்திரியில் அகண்ட தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா.? 

நவராத்திரியின் 9 நாட்களும் அணையாமல் எரிகின்ற அகண்ட தீபத்தை அனைவருமே ஏற்ற வேண்டும் எனும் நியமம் எதுவுமில்லை. ஆனால் அகண்ட தீபத்தை ஏற்றி வழிபடுவது ஒரு சம்பிரதாயமாகும்

தொடர்ந்து, 9 நாட்கள் செய்கின்ற நவராத்திரி பூஜை தடையில்லாமல் நடைபெறுவதற்காக அகண்ட தீபம் ஏற்றி வழிபடுகின்றோம்.

 அத்துடன் நமது சங்கல்பம் அகண்டமாக விருத்தியடைய வேண்டும், வெற்றியடைய வேண்டும் என்ற நம்பிக்கையிலும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. 

அகண்ட தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. முக்கியமாக ஆரோக்கிய விருத்தியும், ஆயுள் விருத்தியும் கிடைக்கும்.

அத்துடன், தீபத்தின் ஜோதியில் குடிகொண்டிருக்கும் அம்பாளை மனதார துதித்து வழிபட்டால் பொன், பொருள், ஆபரணச்சேர்க்கை ஏற்படும். கடன் தொல்லைகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

navarathiri aganda theepam 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->