திருச்செந்தூரில் மாசித்திருவிழா; 12-ஆம் நாளான நாளை நடைபெறவுள்ள மஞ்சள் நீராட்டு திருக்கோல வீதி உலா..!
Masithiru festival in Tiruchendur
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 03-ந் தேதி தொடங்கியது. இந்த மாசித்திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 11-ஆம் திருநாளான இன்று மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் சமேத தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு சென்றனர்.
அங்கு குமரவிடங்கபெருமான் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாரானை நடைபெற்றது. பின்னர் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளிய சுவாமி, அம்பாள் வெளி வீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கு இரவு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அதன் பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் இருவரும் வண்ண மலர்களாளும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் மிதந்து வந்த தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமியும், அம்மாளும் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
12-ஆம் நாளான நாளை மாலையில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 08 வீதிகளிலும் உலா நடக்கவுள்ளது. இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்க்கவுள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Masithiru festival in Tiruchendur