இந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. எல்லோரிடமும் அன்பாகவும்.. கனிவாகவும் பழகுவார்கள்..!!
macham palan 13
இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையை பற்றி கூறுவார்கள்.
இன்று நாக்கில் மச்சம் இருந்தால் என்ன பலன்? என்று பார்ப்போம்.
பெண்களுக்கு நாக்கில் மச்சம் இருந்தால்...
பொதுவாக, பெண்களின் நாக்கில் மச்சம் இருந்தால் அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாய் இருப்பார்கள். அவர்கள் இனிமையான குரல் படைத்தவர்களாகவும், சங்கீதக் கலையை நன்கு கற்றவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் இரக்க சுபாவம் கொண்டவர்களாகவும், தங்களால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எல்லோரிடமும் அன்பாகவும், கனிவாகவும் பழகுவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால் பலர் அவர்களுடைய நட்பை நாடி வருவார்கள்.
அவர்களுடைய வாழ்க்கையில் அடிக்கடி யோகமான பலன்கள் நடைபெறும். அவர்கள் கண்ணியமாய் நடந்து கொள்வார்கள். உயர்ந்த இலட்சியங்களை பெற்றிருப்பார்கள். அவர்களுள் சிலர் வெளிநாடுகளுக்கு சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்தி பெரும் புகழுடன் திரும்புவார்கள்.
அவர்களிடம் அறிவும், ஆற்றலும் நிறைந்திருக்கும். அவர்கள் தங்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும், உறவினர்களுக்கும் நல்ல யோசனைகளை வழங்குவார்கள். அத்துடன், உறவினர்களின் குடும்பங்களில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள்.
அவர்கள் ஏதாவது தொழில் அல்லது வியாபாரம் செய்தால் அவர்கள் எதிர்பார்ப்பதைவிட நல்ல இலாபம் கிட்டும். உத்தியோகம் பார்த்தால் பதவி உயர்வு மிக விரைவாய் கிட்டும்.
ஆண்களுக்கு நாக்கில் மச்சம் இருந்தால்...
ஆண்களுக்கு நாக்கில் மச்சம் இருந்தால் கலைகள் உணர்ந்த சிறந்த அறிவாளியாக இருப்பார்கள். இவர்களிடம் வாக்குப்பலிதம் இருக்காது. நாக்கின் அடியில் மச்சம் பெற்றவர் யோகியாக திகழ்வார்கள்.