இறைவனை அல்லது இறை சம்மந்தமான கனவுகளை கண்டால் என்ன பலன்?
kanavu palan 2
திருமாலை அல்லது ஸ்ரீ மந் நாராயணரை எந்த வடிவில் கண்டாலும் செல்வச் செழிப்பு ஏற்படும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். எதிரிகள் கூட வீழ்வார்கள். கருடன் மீது திருமால் வருவது போலக் கனவு கண்டால் வழக்குகள் சாதகம் ஆகும்.
ஏசுநாதர் அல்லது மகான்களைக் கனவில் கண்டால் மனதில் அமைதி உண்டாகும். புகழ் உண்டாகும். ஆனால், அதே சமயத்தில் ஏசுநாதரை சிலுவையில் அறைவது போலக் கனவு கண்டால் பெரும் துன்பம் வந்து சேரும். எனினும், இறுதியில் அது வெற்றி ஆகும்.
ஏதாவது ஒரு குறிப்பிட்ட கடவுள், விக்கிரக வடிவில் அடிக்கடி கனவில் வந்தால் உடனே அந்தக் கடவுள் இருக்கும் ஸ்தலம் நோக்கிப் புறப்பட்டு தரிசனம் செய்து வருவது நல்லது. ஒரு கடவுளின் சிலை ஆனது மண்ணில் புதைக்கப்படுவது போலக் கனவு கண்டால், உங்களது தெய்வ பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தம். மற்றபடி பெரிய கெடுதல் வராது.
ஏதேனும் ஸ்தலத்தின் கோபுரத்தை நீங்கள் கனவில் கண்டால் காரியங்கள் சித்தியாகும், அதைவிட உங்கள் பாவங்கள் தொலைந்தது என்று தான் அர்த்தம்.