செல்வத்தை அள்ளித்தரும் ரேகை.. உங்கள் கையில் இருந்தால் பண மழையில் நனைவீர்கள்..!!
kairegai palan 36
யாருக்குத்தான் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்காது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் கடுமையாக வேலை செய்வது எதற்காக? கஷ்டமின்றி, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்கு தானே. சிலருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு வரும்.
அந்த வகையில் கைரேகை ஜோதிடத்தின் படி, கையில் உள்ள ஒரு சில ரேகைகளின் மூலம் நாம் பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளதா? என்பதை பற்றி பார்க்கலாம்.
திரிசூலம் போன்ற குறியுடைய ரேகை ஒருவரது கையில் இருந்தால் அவர் மிகவும் ராசியானவர் ஆவார். திரிசூலத்தில் மூன்று கூர்மையான கோடுகள் இணைந்துள்ள ரேகையை ஆங்கிலத்தில் வுசனைநவெ என்று அழைக்கப்படும்.
திருசூல ரேகை இருப்பவரது வாழ்வில் செல்வம் கொட்டும். திருசூல ரேகையின் மூலம் ஏற்படும் ஆன்மீக பலத்தினால் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவார்கள். மேலும், தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள்.
திரிசூல ரேகை சுக்கிர மேட்டில் காணப்பட்டால், காதல் வாழ்வில் மிகவும் அதிர்ஷ்டமான நபராக இருப்பார்கள். அதே சமயத்தில் மற்ற நபர்களையும் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
சந்திர மேட்டில் திரிசூல ரேகை அமைந்திருந்தால், கற்பனை மற்றும் செயல்திறனில் இவர்கள் மேம்பட்டு காணப்படுவார்கள்.
இதய ரேகையில் திரிசூல ரேகை அமைப்பு இருந்தால் உணர்வு, மனம் மற்றும் உடல் ரீதியாக மிகவும் வலிமையான நபராக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு செல்வம் வந்து கொண்டே இருக்கும்.
விதி ரேகையில் திரிசூல ரேகை அமைந்திருந்தால், இவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாகவும், பணத்திற்கு பஞ்சம் இல்லாமலும் இருக்கும். அதேபோல் நிலம் சார்ந்த தொழிலில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.
புத்தி ரேகையில் திரிசூல ரேகை அமைந்திருந்தால், தற்போது செய்து கொண்டிருக்கும் வேலை மற்றும் தொழில் சிறப்பாக அமையும். இவர்களின் வெற்றிக்கு பேச்சுத்திறனே உறுதுணையாக இருக்கும்.
புதன் ரேகையில் திரிசூல ரேகை அமைந்திருந்தால், இருக்கின்ற நிலையில் இருந்து மேம்பட வாய்ப்புகள் உண்டு. இவர்கள் தங்களுடைய பேச்சுத்திறனின் மூலமாகவே பார்வையாளர்களை எளிதாக ஈர்த்து விடுவார்கள்.
குரு பகுதியில் திரிசூல ரேகை அமைந்திருந்தால், வெற்றி பெறுவது மட்டுமின்றி, லட்சியங்களும் நிறைவேறும்.
சனி பகுதியில் திருசூல ரேகை அமைப்பு இருந்தால், அதிக புத்திசாலியாக இருப்பார்கள். அதே சமயத்தில் செல்வத்தையும் தாண்டி, சிறப்பான முறையில் வெற்றிகளை குவிக்கும் நபர்களாகவும் இருப்பார்கள்.
சூரிய ரேகையில் திரிசூல ரேகை அமைப்பு பெற்றிருந்தால், வெற்றி மற்றும் செல்வம் என்பதை தாண்டி அதிக புகழையும் பெற்று திகழ்வார்கள்.