குரு மேடு மற்றும் சனி மேடு.. உங்கள் கையில் எப்படி உள்ளது?
kairegai palan 34
குரு மேடு உச்ச நீசமின்றி விசாலமாக இருந்தால் அழகு உடையவர்களாகவும், மிருதுவாக இருந்தால் கடவுளின் மீது பக்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும், எடுத்த காரியத்தை நிறைவேற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.
குரு மேட்டில் பிறை வட்டம், சதுரம், முக்கோணம், சூலம், நட்சத்திரக்குறி முதலிய குறிகள் காணப்பட்டால் வீரம், கீர்த்தி மற்றும் ஐஸ்வர்யம் உடையவர்களாக இருப்பார்கள்.
குரு மேட்டில் கருப்பு புள்ளி இருந்தால் தன நஷ்டம் உண்டாகும்.
குரு மேட்டில் ஒரு வெள்ளை புள்ளி இருந்தால் செல்வத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
குரு மேட்டில் ஒரு கோடு உற்பத்தியாகி சனி மேட்டை நோக்கி சென்றால் கைத்தொழில் மூலமாகவும், சூரிய மேட்டை நோக்கி சென்றால் வர்த்தகம் மூலமாகவும், சந்திர மேட்டை நோக்கி சென்றால் விவசாயத்தின் மூலமாகவும் வருமானத்தை கொடுக்கும்.
சனி மேடும் அதன் ரேகைகளும் :
சனி மேடு போதுமான அளவு விசாலமாகவும், அதனோடு இருபக்கமுள்ள குரு மேடும், சூரிய மேடும் சமமாக இருந்தால் கடவுளின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள்.
சனி மேடு நல்ல நிலையில் இருந்தால் இரும்பு மற்றும் செம்பு போன்ற கைத்தொழில் செய்பவர்களாக இருப்பார்கள்.
சனி மேட்டின் மேல் அதிர்ஷ்ட ரேகை எந்தவொரு பின்னலுமின்றி தீர்க்கமாக இருந்தால் அதிகமான திரவியத்தை சம்பாதிப்பார்கள்.
சனி மேட்டின் மேல் நட்சத்திரக்குறி காணப்பட்டால் அது தீங்கை விளைவிக்கும்.
சனி மேட்டில் ஒரு கருப்பு புள்ளி காணப்பட்டால் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.