வெற்றியை தீர்மானிக்கும் புத்தி ரேகை... உங்கள் கையில் எப்படி இருக்கிறது? - Seithipunal
Seithipunal


புத்தி ரேகை : 

புத்தி ரேகை எனப்படுவது ஆயுள் ரேகைக்கு மேலே குரு மேட்டுக்கு கீழிருந்து ஆரம்பித்து, நேராக உள்ளங்கையின் புதன் மேட்டுக்கு கீழே உள்ள செவ்வாய் மேட்டில் முடியும் ஒரு ரேகை ஆகும். சில சமயம் இந்த ரேகை செவ்வாய் மேட்டிலோ, சந்திர மேட்டிலோ முடிவடையலாம். 

இந்த புத்தி ரேகை தான் ஒருவருடைய அறிவு, நீதி, நேர்மை மற்றும் மனநிலை ஆகியவற்றை குறிக்கிறது. இந்த புத்தி ரேகையைத்தான் பிரதானமாக ஆராய வேண்டும்.

அறிவாளிகள் கையில் இந்த புத்தி ரேகை மிகவும் எடுப்பாக இருக்கும். மெலிந்து, வளைவுகள் இல்லாமல் காணப்படும். இவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகளாக விளங்குவர். சமுதாயத்தில் செல்வம், செல்வாக்கு, புகழ் ஆகியவற்றை பெற்று இருப்பார்கள். 

இந்த ரேகை மெலிந்து எடுப்பாக அமையாமல், தடித்து காணப்பட்டால் எல்லாவற்றிலும் முட்டாள்தனமாகவும், பரபரப்பாக நடந்து கொள்கிறவர்களாகவும் இருப்பார்கள்.

புத்தி ரேகையானது ஆயுள் ரேகை வரை வந்து அதன் பின்னர் மணிக்கட்டை நோக்கி திரும்பி இருந்தால் எதிலும் நிதானப்போக்கு இல்லாதவர்களாகவும், உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், முன் எச்சரிக்கையுடன் செயல்படுபவராகவும் இருப்பார்கள்.

புத்தி ரேகை, ஆயுள் ரேகை இரண்டிற்கும் இடையில் இடைவெளியானது நடுத்தரமாகக் காணப்படுமேயானால் தன்னம்பிக்கை உள்ளவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு தற்பெருமை அதிகமாக இருக்கும்.

ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் இணைந்து உடனேயே பிரிந்து உள்ளங்கையின் அடிப்புறத்தை நோக்கி சாய்ந்து செல்லுமானால் கலைஞர்களாக இருப்பார்கள். 

புத்தி ரேகையும், ஆயுள் ரேகையும் தனித்தனியே பிரிந்திருக்குமேயானால் தற்பெருமை உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், தன்னம்பிக்கை இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இவர்கள் அதிகமாக பேசுவார்கள்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kairegai palan 27


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->