உங்கள் கைரேகைப்படி ஆயுள் ரேகை என்ன சொல்கிறது? தெரிஞ்சுக்கலாம் வாங்க...!
kairegai palan 26
கைரேகைகளிலேயே மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகை. இந்த ஆயுள் ரேகையை கொண்டுதான் ஒருவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார்? என்பதை கணக்கிடுவார்கள்.
மேலும், ஆயுள் ரேகையின் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதன் தன்மையை கொண்டு ஒருவரது குணம், உடல் நலம் மற்றும் வாழ்க்கை போன்றவற்றையும் அறிய முடியும்.
எது ஆயுள் ரேகை?
ஆயுள் ரேகை என்பது ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலுக்கு நடுவில் இருந்து கீழ் நோக்கி சென்று மணிக்கட்டுடன் இணையும். உங்கள் ஆயுள் ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது? என்று பார்ப்போம்.
டித்த மற்றும் மெல்லிய ஆயுள் ரேகை :
தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும்.
தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
குட்டையான ஆயுள் ரேகை :
ஆயுள் ரேகை குட்டையாக அல்லது சிறியதாக இருந்தால், இவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொண்டு போவதற்கு ஏற்ற ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பார்கள்.
உடைந்த ஆயுள் ரேகை :
ஆயுள் ரேகையில் பிளவு கொண்டவர்கள் தனி பண்பினைக் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் ஒரு செயலை எடுத்தால் முழுமையாக செய்து முடித்து விடுவார்கள்.
இரட்டை ஆயுள் ரேகை :
இப்படிப்பட்ட ரேகையைக் கொண்டவர்கள் வலிமையானவர்கள். மேலும் இவர்களுக்கு குடும்பத்தின் ஆதரவு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எப்போதும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பர்.
சுக்கிர மேடு மற்றும் ஆயுள் ரேகை :
ஆயுள் ரேகை சுக்கிர மேட்டை சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகை சுக்கிர மேட்டை சுற்றி நெருங்கி காணப்பட்டால், இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
குரு மேடு மற்றும் ஆயுள் ரேகை :
ஆயுள் ரேகை குரு மேட்டு பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்ந்த எண்ணம் கொண்டவர்களாக இருப்பர்.
கீழ் செவ்வாய் மேடு மற்றும் ஆயுள் ரேகை :
ஆயுள் ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், அடக்கம் இல்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர்.
ஆயுள் ரேகையின் மேலான ரேகை :
ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர்.