கைரேகை சாஸ்திரம்.. கையில் உள்ள மேடுகள் சொல்லும் ரகசியம் இதுதான்..!! - Seithipunal
Seithipunal


கைரேகை சாஸ்திரம் என்பது ஒருவரின் உள்ளங்கையில் இருக்கும் கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும்.

வலதுகையில் எதிர்காலம் தெரியும். இடதுகையில் கடந்தகாலம் தெரியும் என்றும், நாம் பிறப்பிலேயே எதைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை இடதுகை காட்டும், நாம் எதற்காக பிறந்திருக்கிறோம் என்பதை வலதுகை காட்டும் என்றும், ஆண்களுக்கு வலதுகையைப் படிக்க வேண்டும், பெண்களுக்கு இடதுகையைப் படிக்க வேண்டும் என்றும், என்ன கிடைக்கும் என்பதை இடதுகை காட்டும், அதைக்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை வலதுகை காட்டும் என்றும் கூறப்படுகிறது.

உங்களது கையில் அமைந்துள்ள மேடுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன் மேடு :

கட்டை விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும் மேடான பகுதி தான் சுக்கிரன் மேடு ஆகும். இந்த சுக்கிரன் மேடு உங்களுக்கு நன்றாக இருந்தால், சொத்துச்சேர்க்கை மற்றும் வாழ்க்கை நன்றாக அமையும்.

குரு மேடு :

குரு மேடு என்பது ஆள்காட்டி விரலுக்கு அடிப்பாகத்தில் இருக்கும். குரு மேடு உப்பலாக இருந்தால் உச்சமேடு எனவும், பள்ளமாக இருந்தால் நீச்ச மேடு எனவும், சமமாக இருந்தால் நடுத்தர மேடு எனவும் அழைக்கப்படுகிறது.

சனி மேடு :

நடுவிரலின் அடிப்பாகத்தில் இருக்கும் மேடு சனி மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்த சனி மேட்டில் ஒரு ரேகை மட்டும் செங்குத்தாக அமைந்தவர், மிக மிக யோகம் உடையவர்களாக இருப்பார்கள்.

சூரிய மேடு :

மோதிர விரலின் அடிப்பாகம் தான் சூரியமேடு. உழைப்பினால் ஒருவருக்கு ஏற்படும் முன்னேற்றம், புகழ் கிடைப்பது, அரசியலில் சாதிப்பது என அனைத்திற்கும் காரணமாக திகழ்வது சூரிய மேடு.

புதன் மேடு :

புதன் மேடு என்பது சுண்டு விரலுக்கு அடிப்பாகத்தில் இருக்கும். புதன் மேடு உப்பலாக இருந்தால் உச்சமேடு எனவும், பள்ளமாக இருந்தால் நீச்ச மேடு எனவும், சமமாக இருந்தால் நடுத்தர மேடு எனவும் அழைக்கப்படுகிறது.

செவ்வாய் மேடு :

சுண்டு விரலுக்கு நேர் கீழே சந்திர மேட்டுக்கு மேலே இருப்பது செவ்வாய் மேடு ஆகும். நமது கையில் இரண்டு வகையான செவ்வாய் மேடுகள் இருக்கிறது. கீழ் செவ்வாய் மேடு மற்றும் மேல் செவ்வாய் மேடு எனப்படும்.

மேல் செவ்வாய் மேடு என்பது சுண்டு விரலுக்கு கீழே சுக்கிர மேட்டுக்கு மேலே உள்ள பகுதியாகும். கீழ் செவ்வாய் மேடு என்பது குரு விரலுக்கு கீழே சுக்கிர மேட்டுக்கு மேலே உள்ள மேடாகும்.

சந்திர மேடு :

நமது உள்ளங்கையில் மணிக்கட்டின் கீழ்ப்புற ஓரத்தில் இருந்து உள்ளங்கையின் வெளிப்புற ஓரத்தில் உப்பலாக இருக்கும் பகுதி சந்திர மேடு எனப்படும். சந்திர மேடு என்பது குரு மேட்டுக்கு எதிரே உள்ள மேடாகும். இது புதன் மேட்டுக்கு கீழே அமைந்திருக்கக்கூடிய மேல் செவ்வாய் மேட்டுக்கு கீழே உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kairegai palan 17


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->