இன்றைய தினப்பலன்கள்... மேஷ ராசிக்கு சூப்பர்... கன்னி ராசிக்கு அட்டகாசம்... உங்களுக்கு? - Seithipunal
Seithipunal


மேஷம்:

வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எண்ணிய காரியங்களில் தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சகோதரர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். 

ரிஷபம்:

எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். உறவினர்களால் சுபவிரயம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். 

மிதுனம்:

பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். மனை தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். 

கடகம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் தொழில் வகை ஆதாயம் உண்டாகும். கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் ஏற்படும். 

சிம்மம்:

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிறருக்கு உதவுதலில் நிதானம் வேண்டும். வரவேண்டிய தனவரவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியான செயல்பாடுகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். 

கன்னி:

பயணங்களால் நன்மை உண்டாகும். புத்திக்கூர்மை வெளிப்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். செய்யும் செயல்களால் பாராட்டப்படுவீர்கள். அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.  

துலாம்:

உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள்.  சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.   

விருச்சகம்:

வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். 

தனுசு:

மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். நண்பர்களுடான நட்பு நிலை மேலோங்கும். தந்தையின் ஆதரவால் சுபவிரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கும், தானியங்களை விற்போருக்கும் குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். 

மகரம்:

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். நெருங்கிய சிலருக்காக மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். உயர்கல்வியில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பொருட்களின் மூலம் இலாபம் உண்டாகும். 

கும்பம்:

தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.

மீனம்:

மற்றவர்களின் செயல்பாடுகளை பற்றிய கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்கவும். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீர் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jun 30 rasi palan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->