மரணம்... தம்பதியர்களில் ஒருவரின் ஜாதகம் மற்றவரை பாதிக்குமா?
horoscope 3
ஒருவரின் மரணம் என்பது அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் அடிப்படையில் மட்டுமே நிகழக்கூடியதாகும். தம்பதிகளாக இணைந்த பின்பு ஒருவரின் ஜாதகம் இன்னொருவரின் ஜாதகத்திற்கு எந்த விதத்தில் சாதகமாக செயல்படுகின்றது அதைப்போலவே சில நேரங்களில் சில விரயங்களையும் உருவாக்கக்கூடியதாகும். ஆனால் நமது உடன் இருப்பவர்கள் ஜாதகத்தால் தான் இவர் மரணமடைந்தார் என்று கூறுவது முழுக்க முழுக்க தவறாகும். எப்பொழுதும் நமது உடன் இருப்பவர்களின் ஜாதகத்தால் நமக்கு லாபமும் அல்லது பொருள் விரயமும் மட்டுமே ஏற்படும். மரணம் என்பது ஏற்படுவது இல்லை. இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
நமக்கு மரணம் ஏற்படும் என்ற நிலை வரும்போது நமது கர்மவினைகள் நாம் செய்த பாவ புண்ணியங்கள் இவையாவும் நம்மை பின்தொடர்ந்து நமக்கு மரணத்தை அளிக்கின்றன. உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்பது என்பது உறுதியான ஒன்றாகும். பிறக்கும் குழந்தையானது மரணத்தை நோக்கியே இந்த உலகில் வாழ்க்கையை நடத்துகின்றது. அதில்தான் ஏகப்பட்ட அத்தியாயங்கள், புதுப்புது அர்த்தங்கள், விசித்திரமான மனிதர்கள் மற்றும் மாற்றங்களுடன் வாழ்கின்றன. அவற்றை புரிந்து நம் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது நமது காலமும் முடிந்து அடுத்த பிறவியை நோக்கி செல்ல துவங்குகிறோம்.
சில நேரங்களில் நாம் செய்யும் புண்ணியங்களால் நமது துணைவரின் மனம் நம்மை விட்டு அகலாத வகையில் அடுத்த பிறவிகளிலும் அவரே நமக்கு துணைவியாகவோ அல்லது துணைவராகவும் அமையும் யோகமும் உண்டாகும். ஆகவே ஒவ்வொருவரும் அவரவருக்கு அமையும் துணைவரையோ அல்லது துணைவியாரையும் எந்தவிதத்திலும் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளுதல் நாம் பிறந்த பிறவியின் நற்பலனை அளிக்கக்கூடிய சூழலையும், இறைவனை காணும் நிலையையும் உருவாக்கும் ஒரு அற்புத நிலையாகும்.
பிறவிப் பெருங்கடலை ஆன்மிகத்தில் சென்றுதான் தீர்த்தல் என்பது இல்லாமலும் நம்மை நம்பி வரும் பெண்ணை நாம் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் அவர்கள் மனதை நோகடிக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய எந்த ஒரு ஆண்மகனுக்கும் இறைவனின் திருவடிகள் காணும் வாய்ப்பும் மோட்ச நிலையை உண்டாக்கக்கூடும்.
ஒரு பெண்ணின் மகிழ்ச்சியால் மட்டுமே ஒரு ஆணின் மோட்சம் என்பது இருக்கின்றது என்பதை இங்குள்ள நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் ஒரு ஆண்மகனால் பாதிக்கப்படுவாயின் அது அந்த தலைமுறை முழுவதையும் அழிக்கும் சக்தியையும், வன்மையும் கொண்டதாகும். ஆகவே, ஒவ்வொரு குலத்திலும் பிறக்கும் பெண் குழந்தைகளை நாம் அன்போடும், பண்போடும் அரவணைத்து அவர்களை பேணிக்காத்தல் அவசியமாகும்.