2020.. நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியில்.. நீங்கள் யாரை வழிபட வேண்டும்? - Seithipunal
Seithipunal


நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷ ராசி :

திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை சஷ்டி தினத்தில் சென்று வழிபாடு செய்துவர முன்னேற்றமான வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ரிஷப ராசி :

வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை மல்லிகை மலர்கள் சாற்றி வணங்கி வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், காரியசித்தியும், பூர்வீக மேன்மையும் உண்டாகும்.

மிதுன ராசி :

வியாழக்கிழமைதோறும் மஞ்சள் பூக்களை கொண்டு குருமார்களை வழிபாடு செய்துவர சுபகாரியம் மற்றும் தொழிலில் இருந்துவந்த காலதாமதங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும்.

கடக ராசி :

தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைதோறும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து வழிபாடு செய்துவர உத்தியோக உயர்வும், தந்தை வழியில் ஆதரவுகளும் அதிகரிக்கும்.

சிம்ம ராசி :

வியாழக்கிழமைதோறும் மலைமேல் அமைந்திருக்கும் சித்தர்களை வெள்ளை மற்றும் நீலநிற பூக்களால் வழிபாடு செய்துவர பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளும், உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகளும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி ராசி :

வியாழக்கிழமைதோறும் ஸ்ரீராகவேந்திரரை வழிபாடு செய்துவர மனை மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

துலாம் ராசி :

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை மஞ்சள் நிற பூக்களால் வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிக ராசி :

செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர முயற்சிகள் மற்றும் பொருளாதாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு ராசி :

வியாழக்கிழமைதோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய குருபகவானை மஞ்சள் நிற பூக்களால் வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், ஆரோக்கியத்தில் மேன்மையும் உண்டாகும்.

மகர ராசி :

வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற பூக்களை சூட்டி, எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், மகிழ்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

கும்ப ராசி :

சனிக்கிழமைதோறும் ஜீவசமாதி அடைந்த குருமார்களை வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

மீன ராசி :

வியாழக்கிழமைதோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய பிரகஸ்பதியான தேவகுருவிற்கு மஞ்சள் நிற மலர்களை சூட்டி வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guru peyarchi 2020 in god


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal