கொடியேற்றத்துடன் தொடங்கிய அண்ணாமலையார் தீபத் திருவிழா.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவை காண்பதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த வகையில், இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இன்று காலை 5.45 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, பக்தர்களின் அரோகரா முழக்கங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்தக் கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் மாடவீதி உலா நடைபெற உள்ளது.

இதையடுத்து 23-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ந்தேதி விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

மேலும், அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flag hoisting in thiruvannamalai temple for karthikai deepam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->