அமாவாசை அன்று குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்!!
doubts on astrology in tamil
அமாவாசை அன்று குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?
அமாவாசை அன்று குழந்தைக்கு பெயர் வைப்பதை விடுத்து மற்ற சுப தினத்தில் பெயர் வைக்கவும்.
செவ்வாய் தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?
லக்னத்திற்கு 2, 4, 7, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் மட்டுமே செவ்வாய் தோஷமாகும்.
தனுசு ராசிக்காரர்கள் முத்துப்பாசி அணியலாமா?
தனுசு ராசிக்காரர்கள் ராசியை கொண்டு அணியாமல் லக்னத்தை கொண்டு அணிவது நன்மை அளிக்கும்.
அசைவ உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
அசைவ உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
9 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?
பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.
வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?
வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறக்கலாம்.
2ல் கேது இருந்தால் என்ன பலன்?
கல்வியின் மீது குறைந்த அளவு ஆர்வம் உடையவர்கள்.
குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள்.
பிறர் பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
பஞ்சபட்சி ஜோதிடம் கற்றுக்கொள்ளலாமா?
பஞ்சபட்சி ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.
எந்தவொரு கலையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் நமக்கும், நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்மை உண்டாகும்.
English Summary
doubts on astrology in tamil